"அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

0 7870
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டார்.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில்  பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டார். அதில் 199.67 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று மாணவி சஸ்மிதா முதலிடம் பிடித்துள்ளார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கான ரேங்க் பட்டியலை பார்த்து கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கேபி அன்பழகன், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். கலந்தாய்விற்கான தேதியையும் அவர் வெளியிட்டார். 

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரண்டிலும் அண்ணாவின் பெயர் இருக்கும் என்றார். நவம்பர் 1-ம் தேதி தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கும் அமைச்சர் பதில் அளித்தார்.

அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் மறு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, இனி வாய்ப்பு வழங்க முடியாது என்று அவர் கூறினார். அடுத்த செமஸ்டரில் உரிய தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வினை எழுதி கொள்ளலாம் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments